அதிர்ஷ்டம் தரும் குருபலம்!

ஜோதிட சாஸ்திரம் பல நலன்தரும் ரகசியங்களை மறைவாக மனித சமூகத் திற்கு போதிக்கின்றன. ஜோதிடத்தை கற்று அதனை உணர்ந்துகொள்ள பல ஆண்டுகள் தேவைப்படுகின்றது. ஜோதிட நூல்கள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம் என கூறும்வண்ணம் நல்ல கருத்துக்களைக் கொண்டு விளங்குகின்றது.

Advertisment

தற்போது குருபலம் பெறுகின்ற காலம் இது. குருபலம் என்றால் நமக்கு திருமணத் திற்குச் சொல்லப்படுகின்ற குரு பலன் மட்டுமே நினைவில் தோன்றும்.

ஆனால் இங்கு குருபலன் என நான் குறிப்பிடுவது குரு வலுப்பெற்ற காலம் என்பதே ஆகும். குருபகவான் நீசம் பெறாது, பாவ கிரக சேர்க்கை பெறாது, அஸ்தங்கம் பெறாது தனது வீட்டிலோ, நட்டு வீட்டிலோ, உச்ச வீட்டிலோ, வலுவோடு இருக்கும் சுப காலத்தைதான் நான் குருபலம் என்று கூறுகின்றேன்.

அதற்கான காரணம் முகூர்த்த மாதவீயம் என்னும் நூல் அற்புதமான ஒரு தகவலை நமக்குத் தெரிவிக்கின்றது.

இஷ்ட கிரஹே ஸுரபூஜ்யே ஸ்வாம்

"ஸகதேதனுஸம்ஸ்தே

ஸம் கிரஹணம் நவ ஹேம்ன

கோடி குணம் குருதே தல்'.

Advertisment

ss

முகூர்த்த மாதவியம்

குருபகவான் நட்பு வீட்டில் லக்னத்தில் அமர்ந்து நவாம்சகத்தில் தனது சொந்த ராசியில் அமரும் காலம் அவர் நிற்கும் வீட்டை லக்னமாகக் கொண்டு புதிய தங்கத்தை வாங்கி னோம் என் றால், தங்கம் பெருகும். ஒருவர் கைகளில் இருக்கும் தங்கத்தின் அளவு கூடிக்கொண்டே செல்லும். தங்கம் வசியமாகும் என்பதே, இந்த நூல் கருத்தாகும். இத்தகைய நாள் தற்போது வர இருக்கின்றது. அதனை கீழ் காணலாம் ஆனால் எனது கருத்து குருவலு பெற்றக் காலத்திலே தங்கம் வாங்கினால் தங்கம் பெருகும் என்றால் குருபகவான் ப-விழந்த காலத்தில், அவர் வலுவற்ற லக்னத்தில் தங்கம் வாங்கினால் தங்கம் அழியும் என்பதே முகூர்த்த சாஸ்திரம் நமக்கு உணர்த்தும் எதிர்மறையான கருத்தாகும். எனவே நாம் தங்கம் வாங்கும் காலத்தில் குருபகவான் வலுவோடு இருக்கவேண்டும்.

நாம் தங்கம் வாங்கும் நேரத்தில் முகூர்த்த லக்னத் திற்கு அவர் அனுகூலமாக விளங்கவேண்டும் என்பதே இதன்மூலம் நாம் தெரிந்து கொண்டது. தற்போது குரு பகவான் மேஷ ராசியில் தனது நட்பு வீட்டில் உள்ளார். அவர் வைகாசி மாசம் தனது பகை வீட்டிற்கு செல்ல இருக்கின்றார் மட்டுமல்ல; அவர் அஸ்தகமும் பெறபோகின் றார். எனவே குரு பகவான் மேஷ ராசியில் இருக்கும் இந்த வேளையில் மேஷ லக்னத்தில் தங்கம் வாங்குவது சிறப்பு என்பதே ஆகும். அவ்வாறு வாங்கப்படும் தங்கம் காலங் காலமாக நம் கைகளில் தங்கும். தங்கம் நமக்கு வசமாகும் என்பதே சுருக்கமான கருத்தாகும். எனவே அன்புப் பெரியவர்களே தற்போது ஒரு சுபநாளில் மேஷ லக்னத்தில் தங்கத்தை வாங்கிவிடுங்கள். வருகின்ற மேமாதம் முதல் அவர் அஸ்தங்கம் பெறப்போகின்றார் எனவே அதற்குமுன்பாக சிறிதேனும் மேஷ லக்னத்தில் தங்கத்தை வாங்கினால் சிறப்பு என்பதாகும். மேலும் ஏப்ரல் 18-ல் இருந்து 25-ஆம் தேதிக்குள் மேஷ லக்னத்தில் ஆன்லைனில் தங்கத்தை சிறிதேனும் வாங்குவது தங்கம் பெருக வழிவகுக்கும் என்று அன்போடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

செல்: 94438 08596